×

கார்கே குறித்து அவதூறு பேச்சு கர்நாடக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்டேரேவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய பாஜவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரக ஞானேந்திரா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சாதியை குறிப்பிடும் விதமாக நிற ரீதியாக அவமதித்து பேசினார். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 3 காவல் நிலையங்களில் அரக ஞானேந்திரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கார்கேவின் பெயரை நான் எங்கும் குறிப்பிடவில்லை. எனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பாஜ முன்னாள் அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

The post கார்கே குறித்து அவதூறு பேச்சு கர்நாடக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Karke ,Bengaluru ,BJP ,Minister ,Araka ,Forest Minister ,Ishwar Kandere ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...